search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப் மாமனார்- மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை
    X

    டிரம்ப் மாமனார்- மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மாமனார், மாமியாருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Trump #USCitizens
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா. இவரது பெற்றோர் விக்டர்-அமலிஜா னவ்ஸ் ஆகியோர் சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர்கள்.

    அவர்களில் விக்டர் கார் விற்பனையாளராகவும், அமலிஜா ஜவுளி தொழிற்சாலையிலும் பணிபுரிந்தனர். 70 வயதுக்கு மேற்பட்ட இவர்கள் செவ்னிகா நகரில் தங்கியிருந்தனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் தற்போது அமெரிக்க குடிமக்கள் ஆகி விட்டனர். நியூயார்க்கில் அதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    அமெரிக்க குடியுரிமை பெற அதற்கு விண்ணப்பிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே ‘கிரீன் கார்டு’ (பச்சை அட்டை) பெற வேண்டும். ஆனால் மெலானியாவின் பெற்றோர் சமீபத்தில் தான் கிரீன் கார்டு பெற்றனர்.



    அவர்களுக்கு மருமகனும், அதிபருமான டிரம்ப் தனது அதிகாரத்தின் மூலம் வழங்கினார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கான குடியுரிமை கொள்கையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் அவர் தனது குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. #Trump #USCitizens
    Next Story
    ×