என் மலர்

  செய்திகள்

  அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்று நாடு திரும்பும் இந்தியர்கள் - பணவசதி இல்லாதவர்களுக்கு இலவச விமான டிக்கெட்
  X

  அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்று நாடு திரும்பும் இந்தியர்கள் - பணவசதி இல்லாதவர்களுக்கு இலவச விமான டிக்கெட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்று நாடு திரும்பும் பண வசதி இல்லாத இந்தியர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்க இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. #UAEAmnesty2018 #IndianDiplomacy
  அபுதாபி:

  ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது:-

  அமீரகத்தில் விசா காலாவதியாகி சட்ட விரோதமாக பல நாட்கள் தங்கி இருக்கும் வெளிநாட்டவருக்கு பொது மன்னிப்பு வழங்க அமீரக அரசு அறிவித்துள்ளது. இந்த பொதுமன்னிப்பு நாளை (புதன்கிழமை) தொடங்கி 3 மாதம் அமலில் இருக்கும். இந்த 3 மாதங்களுக்குள் அமீரகத்தில் சட்ட விரோதமாக வசிப்பவர்கள் தாங்களாக முன் வந்து பொது மன்னிப்பை பெற்று வெளியேறலாம்.

  இந்த திட்டத்தின் கீழ் ‘அப்ஸ்கான்டிங்’ எனப்படும் நிறுவனங்களால் தலைமறைவானவர் என்று பதிவு செய்யப்பட்ட நிலையில் (ஸ்டேட்டஸ்) உள்ளவர்கள் குடியுரிமை அலுவலகங்களில் 500 திர்ஹாம் கட்டணம் செலுத்தி தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளலாம்.

  இந்த நிலையை மாற்றிக்கொண்டால் தொடர்ந்து அவரது விசாக்காலம் வரை அமீரகத்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இதில் இவர்கள் மீதுள்ள பயணத்தடையும் நீக்கம் செய்து தரப்படும்.

  அமீரகத்தில் வசித்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தவறவிட்டவர் அல்லது காலாவதியான நிலையில் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் தங்கள் நாட்டின் தூதரகம் அல்லது துணைத்தூதரகத்திடம் விண்ணப்பித்து வெளியேறும் அனுமதி கடிதம் (அவுட் பாஸ்) பெற வேண்டும். அந்த கடிதம் பெறுவதற்கு தூதரகங்கள் அல்லது துணைத்தூதரகங்களிடம் கட்டணம் செலுத்த வேண்டும்.

  அவர்களுக்கு அடுத்த 10 நாட்களில் பயணத்தடை இல்லாமல் வெளியேறுவதற்கான அனுமதி (எக்சிட் பர்மிட்) வழங்கப்படும். இதில் அந்த அவுட் பாஸ் பெறுவதற்கு பல்வேறு நாட்டு தூதரகங்கள் சலுகை கட்டணங்களை அறிவித்துள்ளது.

  இந்திய தூதரகம் பொது மன்னிப்பு பெற்று பண வசதி இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக அவுட் பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  அதேபோல் அவசர காலத்தில் வழங்கப்படும் சான்றிதழ்களும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தூதரகத்தின் இந்திய சமூக நல நிதியில் இருந்து செலவிடப்படும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர். #UAEAmnesty2018 #IndianDiplomacy

  Next Story
  ×