என் மலர்

  செய்திகள்

  ஐவரி கோஸ்ட் பகுதியில் பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் ஒருவர் பலி
  X

  ஐவரி கோஸ்ட் பகுதியில் பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் ஒருவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரான்ஸ் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஐவரி கோஸ்ட் பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
  பாரிஸ்:

  பிரான்ஸ் நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘கஸேல்’ ரக ஹெலிகாப்டரில் இன்று இரு வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் விமானி, ஒருவர் பயிற்சி பெறும் இளம் வீரர்.

  ஐவரி கோஸ்ட் நாட்டின் வர்த்தக தலைநகரான அபிட்ஜான் நகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் பறந்தபோது அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் போர்ட் போயெட் பகுதியில் உள்ள பிரான்ஸ் நாட்டு ராணுவ முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  அவர்களில் சிகிச்சை பலனின்றி விமானி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள மற்றொருவர் மேல் சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். #Frencharmyhelicoptercrash #Frencharmy #helicoptercrash
  Next Story
  ×