search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் தொடரும் அட்டூழியம் - இந்திய மாணவர் சுட்டுக் கொலை
    X

    அமெரிக்காவில் தொடரும் அட்டூழியம் - இந்திய மாணவர் சுட்டுக் கொலை

    அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர் ஓட்டல் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #IndianStudent #SharathKoppu #GunShooting
    வாஷிங்டன்:

    தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கோபு (26). இவர் அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் சரத் அந்த பகுதியில் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது.

    இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சரத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரத்தை சுட்டது யார் என்பது குறித்தும், அதற்கு காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.



    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சரத்தை சுட்டு கொலை செய்த குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்கள் 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    சரத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக அமெரிக்காவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. #IndianStudent #SharathKoppu #GunShooting
    Next Story
    ×