என் மலர்
செய்திகள்

கலிதா ஜியா ஜாமினுக்கு எதிரான தடையை மீண்டும் உறுதிப்படுத்தியது சுப்ரீம் கோர்ட்
வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கொலை வழக்கில் அளிக்கப்பட்ட ஜாமினுக்கு எதிரான தடையை மீண்டும் சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
டாக்கா:
வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது பேருந்து மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் குற்றவாளியாக இணைக்கப்பட்டார்.
ஏற்கனவே ஊழல் வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கலிதா ஜியாவுக்கு இந்த கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்த ஜாமினுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், முன்னர் ஜாமினுக்கு விதித்திருந்த தடையை உறுதிப்படுத்தி இன்று உத்தரவிட்டுள்ளது.
தேவைப்பட்டால், ஐகோர்ட்டை அணுகி கலிதா ஜியா நிவாரணம் காணலாம். கலிதாவுக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட் இன்னும் நான்கு வாரங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது. #KhaledaZia #BanglaSC

Next Story