என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
விசாரணை எதுவும் கிடையாது- சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற டிரம்ப் திட்டம்
By
மாலை மலர்25 Jun 2018 7:12 AM GMT (Updated: 25 Jun 2018 7:12 AM GMT)

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வழக்கு விசாரணை இன்றி அவர்களின் சொந்த நாட்டிற்கே உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #USmigrants #DonaldTrump
வாஷிங்டன் :
அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என கூறி வரும் அதிபர் டொனால்டு டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருவோரின் விசா நடைமுறைகளை கடுமையாக்கி உள்ளார்.
அதேபோல், சட்ட விரோதமாக அந்நாட்டிற்குள் அகதிகளாக நுழைபவர்களை தடுத்து நிறுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
புதிய குடியேற்ற விதிகளைத் தீவிரமாக அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள டிரம்ப், எல்லைகளின் வழியே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை தனியாக பிரித்து காப்பகத்தில் தங்கவைக்கும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தார். ஆனால், பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் திட்டத்தை சமீபத்தில் ரத்து செய்து அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அகதிகள் குடியேற்றம் பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள டிரம்ப், ‘‘அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் பட்சத்தில், நீதிபதிகள் அல்லது நீதிமன்ற வழக்குகளின் தலையீடு ஏதும் இன்றி, அவர்களின் சொந்த நாட்டிற்கே அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். அவர்கள் நம் நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதை நாம் அனுமதிக்க முடியாது.
மேலும், அமெரிக்காவில் இருந்துகொண்டே அமெரிக்காவை துண்டாட முயற்சி செய்பவர்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வலிமையான எல்லைகளே குற்றம் இல்லாத தேசத்தை உருவாக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கும், புகலிடம் கோரி அமெரிக்காவில் தஞ்சம் அடைபவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் டிரம்ப் தெரிவித்துள்ள இந்த கருத்து குறித்து வெள்ளை மாளிகை, இன்னமும் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #USmigrants #DonaldTrump

Next Story
×