என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை - தலீபான்கள் அறிவிப்பால் பதற்றம்
Byமாலை மலர்19 Jun 2018 3:03 AM IST (Updated: 19 Jun 2018 3:03 AM IST)
“போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை. சூரிய உதயத்திற்கு முன்னர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து தலீபான்கள் வெளியேற வேண்டும்” என்ற தலீபான்கள் அறிவிப்பால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. #Afghanistan #EidFestival
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். அதனை ஏற்று முதல் முறையாக தலீபான்களும் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர். அந்த 3 நாளில் போர் நிறுத்தம் மீறப்படவில்லை.
மாறாக ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலீபான்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து பரிமாறியதோடு, தலீபான்கள் பொதுமக்களுடன் ‘செல்பி’ படங்களும் எடுத்துக்கொண்டனர். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக அதிபர் அஷரப் கனி அறிவித்தார். அதிபரின் இந்த முடிவை அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வரவேற்றன.
ஆனால் ரம்ஜான் பண்டிகை முடிந்து விட்டதால் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் ஆயுதங்களை ஏந்த தலீபான்களுக்கு அந்த அமைப்பு உத்தரவிட்டது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் “போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை. சூரிய உதயத்திற்கு முன்னர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து தலீபான்கள் வெளியேற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அரசு தரப்பு போர் நிறுத்தம் அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என்றும், அதே சமயம் பாதுகாப்புபடை வீரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறபோது தங்களை தற்காத்துக்கொள்ள எதிர் தாக்குதலை நடத்தலாம் என்றும் அதிபர் அஷரப் கனி அறிவித்துள்ளார்.ஒரு தரப்பு போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மற்றொரு தரப்பு போர் நிறுத்தம் தொடருவதாகவும் அறிவித்திருப்பதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது. #Afghanistan #EidFestival #Tamilnews

Next Story
×