என் மலர்

  செய்திகள்

  பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லே திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்
  X

  பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லே திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மார்கலே திருமணத்தில் கலந்துகொண்ட சில முக்கிய பிரபலங்கள் யார் என்பதை காண்போம். #Royalwedding #PrinceHarry #MeghanMarkle

  லண்டன்:

  இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தை ஒட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

  இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர். இவர்கள் தவிர திருமணவிழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள ஒரு திடலில் நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டது.

  இந்திய நேரப்படி மாலை 5.10 மணியளவில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறி கொண்டனர். 

  பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரே மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோர் முதன்முதலாக அந்த இடத்திற்கு வந்த பிரபலங்களில் முக்கியமானவர்கள். பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்தில் கலந்து கொண்டார்.

  பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரே


  அமெரிக்காவை சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தொழிலதிபரான ஜார்ஜ் க்லூனி - மனைவி அமல் உடன்


  இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க நடிகை அபிகெயில் ஸ்பென்சர்


  பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் - மனைவி விக்டோரியா உடன்


  பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் - கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் உடன்


  அமெரிக்க தொலைகாட்சி மற்றும் திரைப்பட நடிகை சாரா ராபெர்டி - கணவர் சாண்டு செப்பாலா உடன்


  முன்னாள் இங்கிலாந்து ரக்பி வீரர் மற்றும் பயிற்சியாளர் சர் கிளைவ் உட்வார்ட் - மனைவி ஜேன் வில்லியம்ஸ் உடன்


  இங்கிலாந்து முன்னாள் ரக்பி வீரர் வில் கிரீன்உட் - மனைவி கரோலின் கிரீன்உட் உடன்


  கனடா நடிகர் பாட்ரிக் ஜே ஆடம்ஸ் - மனைவி மற்றும் அமெரிக்க நடிகையான டொரியன் பெல்லிசாரியோ உடன்


  இளவரசர் ஹாரியின் முன்னாள் பெண் நண்பர் செல்சி டேவி (ஜிம்பாப்வே)


  பிரிட்டன் பாடகி ஜோஸ் ஸ்டோன்


  அமெரிக்க பாடகர் மார்கஸ் மம்போர்ட் - மனைவி மற்றும் பிரிட்டன் நடிகையான கேரி முல்லிகன் உடன்


  இதுதவிர, எங்கிருந்து மணவிழாவை வசதியாக பார்க்க முடியுமோ, அந்த பகுதியில் உள்ள சாலைகளில் நேற்று முதல் லட்சக்கணக்கான மக்கள் நடைபாதைகளில் இடம்பிடித்து காத்திருந்தனர். பிரிட்டன் அரச குடும்பத்தின் இந்த திருமணத்தை உலகில் உள்ள 80 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர். #Royalwedding #PrinceHarry #MeghanMarkle
  Next Story
  ×