search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்
    X

    ஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்

    ஹவாய் தீவுகளில் எரிமலை வெடித்து சிதறிய பகுதிக்கு அருகில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #Hawaii #valcanoeruption

    நியூயார்க்:  

    ஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது. 

    மேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 1500-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு தெற்கு திசையில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பெர்ன் காடுகளுக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 17.7 கிலோ மீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. #Earthquake #Hawaii #valcanoeruption
    Next Story
    ×