என் மலர்

  செய்திகள்

  ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு மாவட்டத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர்
  X

  ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு மாவட்டத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் கனிம வளங்கள் நிறைந்த கோகிஸ்தான் மாவட்டத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். #Talibanfighters #seizedistrict
  காபுல்:

  ஆப்கானிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட பின்னர், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்துள்ள தலிபான்கள் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பதக்‌ஷான் மாகணத்தின் கோகிஸ்தான் மாவட்டத்துக்குள் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கிருந்த சோதனைச் சாவடிகள், மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

  பயங்கரவாதிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாதுகாப்பு படையினர் உயிருக்கு பயந்து தப்பியோடினர். சிலர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சுமார் 20 வீரர்கள் காயமடைந்தனர்.

  ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் கனிம வளங்கள் நிறைந்த கோகிஸ்தான் மாவட்டத்தை தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளதன் மூலம், இப்பகுதியில் மட்டும் 3 மாவட்டங்கள் இவர்களிடம் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #Talibanfighters #seizedistrict
  Next Story
  ×