search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பேஸ்புக்கில் டிரம்பை விட அதிகம் பின் தொடர்பவர்களை கொண்ட மோடி
    X

    பேஸ்புக்கில் டிரம்பை விட அதிகம் பின் தொடர்பவர்களை கொண்ட மோடி

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை விட பேஸ்புக்கில் பிரதமர் மோடியை அதிகமானோர் பின் தொடர்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PMModi #trump #Facebook
    நியூயார்க்:

    சமூக வலைதளங்களில் அதிகமானவர்கள் பின்தொடரும் உலக தலைவர்கள் பற்றி புர்சன் - மார்ட்ஸ்டெல்லர் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளன.

    இதில், டுவிட்டரில் அதிகமானவர்கள் பின்தொடரும் தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்ப் இருந்து வருகிறார். இவரை 2.31 கோடி பேர் பின் தொடர்கின்றனர். இருப்பினும் பேஸ்புக்கில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் உலக தலைவராக இந்திய பிரதமர் மோடி இருந்து வருகிறார். இவரை 4.32 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

    டுவிட்டரை விட பேஸ்புக் பயன்படுத்துபவர்களே ஆசியாவில் அதிகம் உள்ளதால் அதிகமானோர் பின்தொடரும் ஆசிய தலைவராக மோடி இருந்து வருகிறார். பேஸ்புக் அதிகம் பயன்படுத்துபவர்கள் இருக்கும் கம்போடிய நாட்டு பிரதமர் ஹூன் ஷென் 5-வது இடத்திலேயே உள்ளார். இவரை 96 லட்சம்  மக்கள் மட்டுமே பின்தொடர்கின்றனர். கடந்த 14 மாதங்களில் பேஸ்புக்கில் டிரம்ப் 20.49 கோடி  கமன்ட்களையும், லைக்குகளையும், ஷேர்களையும் பெற்றுள்ளார். டிரம்ப் சராசரியாக ஒரு நாளைக்கு 5 முறை கருத்து பதிவிட்டுள்ளார். இது மோடியின் பதிவை விட இரண்டு மடங்கு அதிகம் என்ற போதிலும், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் மோடியே முதலிடத்தில் இருந்து வருகிறார். #PMModi #trump #Facebook

    Next Story
    ×