search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கக்கூண்டுக்குள் புகுந்து உயிர்பிழைத்த அதிசய மனிதர்
    X

    சிங்கக்கூண்டுக்குள் புகுந்து உயிர்பிழைத்த அதிசய மனிதர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் சிங்கக்கூண்டிற்குள் புகுந்த நபர் படுகாயங்களுடன் உயிர்தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #southafrica #lionattack
    கேப்டவுண்:

    ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் உள்ள சிங்கம் ஒன்று தனது கூண்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது. அப்போது கூண்டிற்குள் ஏதோ துர்நாற்றம் வீசியது. அதனை சோதனை செய்ய வனவிலங்கு காப்பகம் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அவரை பார்த்ததும் சிங்கம் வேறு பக்கம் நடந்து சென்றது. இதனால் அவர் தைரியமாக உள்ளே சென்றார். திடீரென சிங்கம் அவரை நோக்கி வேகமாக வந்தது.

    இதனை பார்த்த அவர் கூண்டிலிருந்து வெளியேற முயன்றார். ஆனால் சிங்கம் அவரை கூண்டிற்குள் இழுத்து தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காப்பகத்தின் காவலர்கள் துப்பாக்கியால் மேலே நோக்கி சுட்டு சிங்கத்தை விரட்டினர்.

    இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படுகாயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கத்தின் குகைக்குள் புகுந்த உயிருடன் வெளிவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  #southafrica #lionattack
    Next Story
    ×