search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்பனா சாவ்லா அமெரிக்காவின் ஹீரோ - அதிபர் டிரம்ப் புகழாரம்
    X

    கல்பனா சாவ்லா அமெரிக்காவின் ஹீரோ - அதிபர் டிரம்ப் புகழாரம்

    விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் ஹீரோ என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். #Trump #KalpanaChawla
    வாஷிங்டன்:

    விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்த இந்திய வம்சாவளிச் சேர்ந்த கல்பனா சாவ்லா ஒரு அமெரிக்க ஹீரோ என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், அமெரிக்க அரசினால் ஆசிய அமெரிக்க மற்றும் பசிபிக் தீவுவாசி பாரம்பரிய மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரகடன நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை அமெரிக்க ஹீரோ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    ”இந்திய வம்சாவளிச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்துள்ளார். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மற்றும் குழு பயணம் என விண்வெளி துறைக்கு எண்ணற்ற பணிகளை அவர் ஆற்றியுள்ளார். ஒரு நாள் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் மில்லியன் கணக்கான அமெரிக்க பெண்களுக்கு சாவ்லாவின் தைரியமும், ஆர்வமும் உத்வேகம் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பின்னர் நாசா விண்வெளி மையம் அவருக்கு விண்வெளி விமான பதக்கம் மற்றும் சேவை பதக்கங்களை அளித்து கெளரவித்தது. இத்தகைய சாதனைகள் புரிந்த கல்பனா சாவ்லா ஒரு அமெரிக்க ஹீரோ” என புகழாரம் சூட்டினார்.



    கடந்த 2003 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக கொலம்பியா விண்கலத்தில் 7 பேர் குழுவுடன் சென்ற கல்பனா சாவ்லா விண்கலம் வெடித்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Trump #KalpanaChawla
    Next Story
    ×