என் மலர்
செய்திகள்

மியான்மர் நாட்டின் புதிய அதிபராக வின் மியின்ட் தேர்வு
மியான்மர் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற வின் மியின்ட் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நய்பிடா:
மியான்மர் நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் பல ஆண்டுகளாக நீடித்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. ஜனாதிபதியாக ஹிதின் கியா பதவியேற்றார்.
71 வயதாகும் பிரதமர் ஹிதி கியாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக அவர் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதற்கிடையில், ஹிதின் கியா தனது பதவியை ராஜினாமா செய்ததாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்ய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற வின் மியின்ட் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் பதிவான வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்ற வின் மியின்ட் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பை பாராளுமன்ற சபாநாயகர் மான் வின் கைங் தான் வெளியிட்டார்.
மியான்மர் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த ‘ஜன்டா’ தலைமையிலான ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த 8-11-2016 அன்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ் மியான்மர் நாட்டின் அதிபராக பதவி ஏற்றார்.
அரசின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூகி இருந்து வருகிறார். அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் இவரது அறிவிறுத்தலின்பேரில் தான் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Next Story