என் மலர்
செய்திகள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் இன்றிரவு 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #Indonesiaearthquake
ஜகர்தா:
புவியியல் அமைப்பில் அடிக்கடி நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் இன்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுக்கோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், சேரம் கடல் பகுதியை ஒட்டியுள்ள மலுக்கு மாகாணத்தின் தலைநகரான அம்போன் நகரின் வடகிழக்கே சுமார் 119 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 11.9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #tamilnews #Indonesiaearthquake
Next Story