என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
அதானி திட்டத்துக்கு ஆஸ்திரேலியா நிதி ஒதுக்க மறுப்பு
By
மாலை மலர்4 Feb 2018 10:16 AM GMT (Updated: 4 Feb 2018 11:02 AM GMT)

அதானி குழுமத்தின் திட்டத்தில், சுரங்கத்தில் இருந்து கடற்கரையை இணைக்கும் ரெயில் பாதை அமைப்பதற்கு தேவையான நிதியுதவியை ஒதுக்க ஆஸ்திரேலியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இந்தியாவின் அதானி குழுமம் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த வழக்குகளில் வென்றாலும் கடும், எதிர்ப்புகளுக்கு இடையே இந்த நிலக்கரிச் சுரங்க வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த திட்டத்துக்கு 16.5 பில்லியன் டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தனது சுரங்கத்திலிருந்து கடற்கரையை இணைக்கும் ரெயில் பாதைக்காக அதானி குழுமம் வடக்கு ஆஸ்திரேலியா உள்கட்டமைப்பு அமைப்பிடம் 900 மில்லியன் டாலர்கள் கடன் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், அதானி குழுமம் கோரியிருந்த கடன் தொகையை வழங்கப் போவதில்லை என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய மந்திரி கேரன் ஆண்ட்ரூஸ் கூறுகையில், அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்கத்துக்கு செல்ல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ஆஸ்திரேலிய அரசு நிதி ஒதுக்கப் போவதில்லை. அதானி குழுமம் தனது திட்டத்துக்கு தனியார் நிதியுதவியை நாடவில்லையெனில் இந்த திட்டம் முழுமை பெறாது என தெரிவித்துள்ளார்.
அதானியின் இந்த திட்டத்துக்கு உள்ளூர்வாசிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story
×