search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமனில், ஏடன் நகரை தக்க வைக்க கிளர்ச்சியாளர்களுடன் ராணுவம் கடும் சண்டை: 10 பேர் பலி
    X

    ஏமனில், ஏடன் நகரை தக்க வைக்க கிளர்ச்சியாளர்களுடன் ராணுவம் கடும் சண்டை: 10 பேர் பலி

    ஏமன் அரசின் தலைநகராக விளங்கும் ஏடன் நகரை தக்க வைத்து கொள்ள கிளர்ச்சியாளர்களுடன் ராணுவம் நடத்திய துப்பாக்கி சண்டையில் பெண்கள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.
    ஏடன்:

    ஏமனில் அதிபர், மன்சூர் ஹாதியின் தலைமையில் இயங்கும் ராணுவத்துக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

    அதிபர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா உள்ளது. இதனால் தொடர்ந்து கடுமையான போர் நடந்து வருகிறது.

    இந்த நிலையில், அதிபர் ஹாதியின் ஆதரவாளர்கள் இடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பிரதமர் பின் டாகர் தலைமையில் செயல்படுகின்றனர். அதிபர் ஹாதியின் தலைமையில் இயங்கும் அரசின் தலைநகராக விளங்கும் ஏடனை கைப்பற்ற திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

    அதனால் இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. இதனால் ஏடன் நகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் நடமாட்டம் இன்றி ரோடுகள் மற்றும் தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

    இந்த சண்டையில் 10 பேர் பலியாகினார்கள். அவர்களில் இரு தரப்பையும் சேர்ந்த 9 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவர். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×