என் மலர்

  செய்திகள்

  ஜப்பான்: 15 ஆண்டுகளாக பெற்றோரால் அடைத்துவைக்கப்பட்ட பெண் உடல் உறைந்து மரணம்
  X

  ஜப்பான்: 15 ஆண்டுகளாக பெற்றோரால் அடைத்துவைக்கப்பட்ட பெண் உடல் உறைந்து மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜப்பானில் பெற்றோரால் 15 ஆண்டுகளாக சிறிய அறையில் அடைத்துவைக்கப்பட்ட ஜப்பான் பெண் உடல் உறைந்து மரணம் அடைந்ததையடுத்து பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். #JapanWomen #Frozetodeath #confinedfor15years

  டோக்கியோ:

  ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் வசித்து வருபவர் யசுதகா காகிமோட்டோ (55). அவரது மனைவி யூகாரி (53).  இவர்கள் இரண்டு மீட்டர் உயரம் கொண்ட வேலிகளுக்கு நடுவில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் வசித்து வந்தனர். அதனைச் சுற்றி பல கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருந்தன.

  இந்த தம்பதியை சட்டத்துக்கு விரோதமாகச் ஒரு சடலத்தை அப்புறப்படுத்தியது தொடர்பாக போலீசார் கைது செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அப்புறப்படுத்தியது அவர்களின் 33 வயது மகள் ஏரி காகிமோட்டோவின் சடலம் என்பது தெரியவந்தது.  தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் தெரிவந்துள்ளது. ஏரி, கடந்த 15 ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் அடிக்கடி வன்முறையான முறையில் நடந்து கொண்டார் எனவும் அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக பெற்ற மகள் 3 சதுர அடி அளவிலான சிறிய அறையில் கடந்த 15 ஆண்டுகளாக  அடைத்துவைத்துள்ளனர்.

  அந்த பெண்ணுக்கு ஒரு வேளை மட்டுமே உணவளித்ததையும் அந்த தம்பதியினர் ஒப்புக்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள் ஏரியின் உடலை மீட்கும்போது அவரின் எடை 19 கிலோகிராம் மட்டுமே இருந்துள்ளது. ஏரி அடைத்துவைக்கப்பட்டிருந்த அறையில் வெளிப்பக்கமிருந்து மட்டுமே திறக்கக்கூடிய இரு கதவுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். ஒரு கழிவறையும் தண்ணீர் தொட்டியும் அறையுடன் இருந்துள்ளது.   மகளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு நடந்துகொண்டதாக அந்தப் பெற்றோர் கூறியுள்ளனர். 
  Next Story
  ×