என் மலர்

  செய்திகள்

  ‘ஒபாமா கேர்’ ரத்து விவகாரம் - டிரம்ப் புதிய முடிவு
  X

  ‘ஒபாமா கேர்’ ரத்து விவகாரம் - டிரம்ப் புதிய முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்து விட்டு அதற்கு மாற்று திட்டத்தை கொண்டு வருவதற்கு நிர்வாக உத்தரவு பிறப்பிப்பதில் டிரம்ப் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  வாஷிங்டன்:

  அமெரிக்காவில் முந்தைய ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக்காலத்தில், ஏழை எளிய மக்களும் மருத்துவ காப்பீடு செய்துகொள்ள வசதியாக குறைந்த பிரிமியத்தில் ‘ஒபாமா கேர்’ என்ற பெயரில் ஒரு காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் 2 கோடி அமெரிக்கர்கள் பலன் அடைந்து வருகின்றனர்.

  இந்த திட்டத்தை ரத்து செய்வதில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் உடும்பு பிடியாக உள்ளார். ஆனால் இதற்கு அவரது குடியரசு கட்சியிலேயே போதிய வரவேற்பு இல்லை.

  இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மாற்று திட்டத்தை கொண்டு வர அவர் மேற்கொண்ட கடைசி முயற்சி, கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாராளுமன்ற செனட் சபையில் தோல்வியில் முடிந்தது.

  இந்த நிலையில் ‘ஒபாமா கேர்’ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்து விட்டு அதற்கு மாற்று திட்டத்தை கொண்டு வருவதற்கு நிர்வாக உத்தரவு பிறப்பிப்பதில் தீவிரமாக உள்ளார். இது தொடர்பாக அவர் பரிசீலனை செய்து வருகிறார்.

  இதுபற்றி டிரம்ப் கூறுகையில், “நிர்வாக உத்தரவு பிறப்பிக்க பரிசீலித்து வருகிறேன். மேலும், 2018-ம் ஆண்டு தொடக்க மாதங்களில் பாராளுமன்றத்தில் சுகாதார காப்பீடு திட்ட விவகாரம் மீண்டும் வரும். இது தொடர்பாக ஜனநாயக கட்சியினருடன் பேசுவேன். அதன் பின்னர் தேவையான ஓட்டுகள் கிடைத்து விடும்” என்று குறிப்பிட்டார். 
  Next Story
  ×