search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: தேடப்படும் குற்றவாளியாக முஷாரப் அறிவிப்பு
    X

    பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: தேடப்படும் குற்றவாளியாக முஷாரப் அறிவிப்பு

    பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ல் ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒரு பேரணியில் பங்கேற்ற போது வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த தாக்குதல் தொடர்பாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    இந்த கொலையில் அப்போதைய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.



    இந்நிலையில், தீவிரவாதத் தடுப்பு மையத்தில் இவ்வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஸ்கர் கான் அளித்த தீர்ப்பில், உரிய ஆதாரங்கள் இல்லை என்பதால் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

    இரண்டு போலீஸ் அதிகாரிகளும் அலட்சியமாக நடந்து கொண்டு கொலையை தடுக்க தவறியதால்,  ராவல்பிண்டி நகர போலீஸ் அதிகாரி சையத் அஜிஸ் மற்றும் ராவல் டவுன் முன்னாள் எஸ்.பி. குர்ரம் ஷசாத் ஆகியோருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு தலா 5 லட்சம் அபராதம் விதித்தனர்.  

    மேலும், பெனாசிர் பூட்டோ கொலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×