search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆப்கானிஸ்தானில் பயங்கரம்-  பள்ளியில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 19 மாணவர்கள் பலி
    X

    ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு

    ஆப்கானிஸ்தானில் பயங்கரம்- பள்ளியில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 19 மாணவர்கள் பலி

    • பள்ளியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
    • அனைத்து ஆப்கன் குழந்தைகளுக்கும் பயமின்றி பள்ளிக்குச் செல்ல உரிமை உண்டு.

    ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில் அய்பக் நகரில் உள்ள மதரசா பள்ளியில் திடீரென்று குண்டு வெடித்தது. அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

    இதில் 19 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.

    இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா- கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கானிஸ்தான் குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்ற பிறகு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மசூதிகள், மக்கள் கூடும் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×