என் மலர்

  செய்திகள்

  அண்ணாநகர் தொகுதி
  X
  அண்ணாநகர் தொகுதி

  இந்த முறை வெற்றி யாருக்கு?- கோகுல இந்திரா- எம்.கே. மோகன் மீண்டும் மோதும் அண்ணாநகர் தொகுதி கண்ணோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக சார்பில் கோகுல இந்திரா மீண்டும் களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் எம்.கே. மோகன் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
  அ.தி.மு.க. சார்பில் கோகுல இந்திரா மீண்டும் களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து எம்.கே. மோகன் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த முறை இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் அ.ம.மு.க. குணசேகரன், மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ், நாம் தமிழர் கட்சி சங்கர், பகுஜன் சமாஜ் கட்சி ஜீவித் குமார் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

  அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல இந்திரா சொத்து மதிப்பு

  1. கையிருப்பு- ரூ. 1,52,411
  2. அசையும் சொத்து- ரூ. 96,24,058.48
  3. அசையா சொத்து- ரூ. 4,15,00,000

  தி.மு.க. வேட்பாளர் எம்.கே. மோகன் சொத்து மதிப்பு

  1. கையிருப்பு- ரூ. 1,00,000
  2. அசையும் சொத்து- ரூ. 2,82,92,326
  3. அசையா சொத்து- ரூ. 130,16,41,500

  அண்ணாநகர் வி.ஐ.பி. தொகுதியாகும். பல தலைவர்களை உருவாக்கிய பெருமை இத்தொகுதிக்கு உண்டு. படித்தவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். தெலுங்கு பேசக்கூடிய நாயுடு சமுதாயத்தினர் 35 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் குடிசை மாற்று வாரிய பகுதிகளும் அதிகம் இத்தொகுதியில் உள்ளன.

  அண்ணாநகர் தொகுதி

  அமைந்தகரை, அரும்பாக்கம், டி.பி.சத்திரம், எம்.எம்.டி.ஏ. காலனி, செனாய் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இதில் அடங்கும். அரும்பாக்கம் ராணி அண்ணாநகர், டி.பி.சத்திரம், நடுவங்கரை, எம்.ஜி.ஆர்.காலனி என்.எஸ்.கே.நகர், பொன்வேல் பிள்ளை தோட்டம், அமைந்தகரை மார்க்கெட் பகுதிகளில் குடிசைவாசி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

  இந்த தொகுதியில் அரசின் இயற்கை மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர 6 தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. பழமையான பச்சையப்பன் கல்லூரியும் உள்ளது. 

  அண்ணாநகர் தொகுதி

  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீட், டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் அதிகளவில் செயல்படுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் இங்கு தங்கி படிக்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்த பணிகள் அதிகளவு நடைபெற்று வருகின்றன.

  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரக்கூடிய அண்ணாநகர் டவர் பூங்கா, அய்யப்பன் கோவில் சிறப்பு வாய்ந்தவை. இது தவிர பெருமாள், சிவன் கோவில், பாதாள பொன்னியம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில்கள் உள்ளன. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களும் கணிசமாக வசிக்கிறார்கள்.

  அண்ணாநகர் தொகுதி

  அண்ணாநகர் வளைவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தடுக்க மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது நெரிசலின்றி வாகனங்கள் செல்ல முடிகிறது.

  கீழ்ப்பாக்கம் அருகில் பொழுது போக்கிற்காக படகு குழாம். சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஐ.சி.எப். குடியிருப்பு போன்றவை இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

  இந்த தொகுதியில் தி.மு.க. 8 முறை வெற்றி வாகை சூடியுள்ளது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 2 முறை இங்கிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க. சார்பில் சோ.ம. ராமச்சந்திரன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரும் வெற்றிபெற்று உள்ளனர்.

  அண்ணாநகர் தொகுதி

  முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி 3 முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வாகை சூடியுள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செல்லகுமார் ஒருமுறையும், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளனர். 2016 தேர்தலில் அ.தி.மு.க.விடம் இருந்து தி.மு.க. மீண்டும் இந்த தொகுதியை கைப்பற்றி எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. ஆனார்.

  இத்தொகுதியில் சிறு தொழில் நிறுவனங்கள் இருந்த போதிலும், வளர்ச்சிக்கான பெரிய தொழில்கள் இல்லை. குடிசை மாற்று வீடுகள் நிறைந்தது இந்த தொகுதி. கிராம நத்தத்தில் வசித்து வரும் இவர்கள் நீண்ட காலமாக பட்டா கிடைக்காமல் போராடி வருகிறார்கள்.

  கழிவுநீர் கால்வாய் வசதி இன்னும் பல பகுதிகளில் இல்லாததால் ஆங்காங்கே சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குடிநீர் பிரச்சினையும் இருந்து வருகிறது. தொழிற்கூடங்களும், அதற்கான பயிற்சி முகாம்களும் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

  அண்ணாநகர் மற்றும் அமைந்தகரை உள்ளிட்ட தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

  அண்ணாநகர் தொகுதி

  இங்குள்ள சாலைகளில் வாகன பெருக்கம் காணரமாக போக்குவரத்து நெரிசல் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் இல்லாததால் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் அதிகரித்துள்ளது.

  காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் குறுகிய தூரத்தை கடக்கவே நீண்ட நேரம் ஆகிறது. 
  ஒலி மாசு, காற்று மாசு பெரும் பிரச்சினையாக இங்கு உள்ளன. அமைந்தகரைக்கு அருகில் உள்ள தொழில்களால் இந்த பகுதியில் காற்று மாசு ஏற்படுகிறது.

  இந்த பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை தற்போது போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு உள்ளது. 

  வாக்காளர்கள்

  மொத்தம்- 2,86,019
  ஆண்கள்- 1,40410
  பெண்கள்- 1,45522
  மூன்றாம் பாலினம்- 87

  இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

  அண்ணாநகர் தொகுதி

  1977 கருணாநிதி (தி.மு.க.)
  1980 கருணாநிதி (தி.மு.க.)
  1984 சோ.ம.ராமச்சந்திரன் (தி.மு.க.)
  1989 க.அன்பழகன் (தி.மு.க.)
  1991 ஏ.செல்லகுமார் (காங்கிரஸ்)
  1996 ஆற்காடு வீராசாமி (தி.மு.க.)
  2001 ஆற்காடு வீராசாமி (தி.மு.க.)
  2006 ஆற்காடு வீராசாமி (தி.மு.க.)
  2011 எஸ்.கோகுல இந்திரா (அ.தி.மு.க.)
  2016 எம்.கே.மோகன் (தி.மு.க.)
  Next Story
  ×