search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரூர் தொகுதி
    X
    அரூர் தொகுதி

    அரூர் தொகுதி கண்ணோட்டம்

    2016 மற்றும் 2019 இடைத்தேர்தல் வெற்றி நம்பிக்கையுடன் அதிமுக களம் இறங்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்த்து நிற்கிறது.
    அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி. சம்பத்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஏ.குமார், ஐ.ஜே.கே. சார்பில்  ஜோதிகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கீர்த்தனா, அமமுக சார்பில் ஆர்.ஆர். முருகன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிமுக வேட்பாளர் வி. சம்பத்குமார் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 10,000
    2. அசையும் சொத்து- ரூ. 31,77,900
    3. அசையா சொத்து- ரூ. 15,11,250

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ. குமார் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 1,000
    2. அசையும் சொத்து- ரூ. 1,000
    3. அசையா சொத்து- ரூ. ஏதுமில்லை

    தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி 1952-ல் புதிதாக உருவாக்கப்பட்டது 1952 முதல் 1957 வரை இத்தொகுதியில் இரட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் நடைமுறை இருந்தது. தேர்தலில் அதிக வாக்குகள் பெறும் எஸ்.சி அல்லாத பொதுபிரிவில் ஒருவரும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெறும் ஒருவரும் என இரண்டு சட்டமன்ற உறுப்பினர் நடைமுறை இருந்தது. அதன் பிறகு எஸ்.சி தனி தொகுதியாக இருந்து வருகிறது.

    அரூர் சட்டமன்ற தொகுதியில் அரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மொரப்பூர் சட்டமன்ற தொகுதி சீரமைப்பில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் அரூர் சட்டமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டன.

    அரூர் தொகுதி

    தருமபுரி மாவட்டத்தின் மிக முக்கிய ரெயில் நிலையமாக விளங்குவது மொரப்பூர் ரெயில் நிலையமாகும். இந்த ரெயில் நிலையம் 1861-ம் ஆண்டுமுதல் பயன்பாட்டிற்கு வந்தது. தலைநகரமான சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான காட்பாடி, வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை,மற்றும் அண்டைய மாநிலங்கலான ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று வர மொரப்பூர் ரெயில் நிலையம் மூலமாகவே சென்று வந்தனர்.

    அந்த கால கட்டத்தில் மொரப்பூர் ஜங்சன் ரெயில் நிலையமாக இருந்துள்ளது. மொரப்பூரில் இருந்து தருமபுரிக்கு ரெயில் மூலம் பொதுமக்கள் சென்று வந்ததுடன் விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் வசதியாக இருந்தது. இந்த ரெயில் நிலையத்தை நிர்வாக காரணங்களுக்காக மொரப்பூர்- தருமபுரி ரெயில் திட்டத்தை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துவிட்டது.

    தீர்த்தமலை

    தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அமைந்துள்ளது.

    அரூர் தொகுதி

    மேலும் மஞ்சள், வாழை, கரும்பு, மரவள்ளி கிழங்கு, சிறுதானியங்களான அவரை, துவரை, கம்பு, சோளம் உள்ளிட்ட வேளாண் உற்பத்தியில் அரூர் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது.

    இதில் அருர் சட்டமன்றத் தொகுதியில் அருர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அரூர் பேரூராட்சி மற்றும் கடத்தூர் பேரூராட்சி ஆகிய 2 பேரூராட்சிகள் உள்ளடக்கி உள்ளன.

    வாக்காளர்கள்

    அரூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 543 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 62- பேர் உள் ளனர். மற்றவர்கள் 14 என மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.

    அரூர் தொகுதி

    அரூர் சட்டமன்ற தொகுதியில் அரூர் அருகே உள்ள வள்ளி மதுரை அணை மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.ஈச்சம் பாடி அணை ஆகிய 2 அணைகள் பிரதானமாக உள்ளது. இந்த அணைகள் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் நீர் பாசன வசதி பெற்று வருகிறது. விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் இப் பகுதியில் மஞ்சள், வாழை, நெல் ,கரும்பு ,மரவள்ளி, மாம்பழம் உள்ளிட்ட வேளாண் பொருட்களும் காய்கறிகளும் அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    அரூரில் ஒரு உழவர் சந்தையும் செயல்பட்டு வருகிறது. இங்கு விளையும் பொருட்கள் பெரும்பாலும் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்ககளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியில் கரும்பு சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வந்ததால் அரூர் அருகே உள்ள கோபாலபுரத்தில் சுப்பிர மணிய சிவா கூட்டு றவு சர்க்கரை ஆலை ஒன்று நிறுவப்பட்டு அது செயல்பட்டு வருகிறது.மேலும் இப்பகுதியில் கிருஷ்ணகிரி அணைக்கட்டில் இருந்து வலதுபுற கால்வாயை திப்பம்பட்டி, கம்பைநல்லூர் வழியாக மொரப்பூர் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு பகுதிகளிலுள்ள கிராம ஏரிகளுக்கு தண்ணீர் விடும் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என நீண்டகாலமாக கோரி விவசாயிகள் மற்றும் சமூக அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    அரூர் தொகுதி

    இந்த திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல் அருர் ஊராட்சி ஒன்றியம் எம்.வெ ளாம்பட்டி அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே சென்னாக்கால் அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக 2016-ல் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டமும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    இதனால் நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லாததால் விவசாயிகள் மழையை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள்.விவசாயத்திற்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் நாளடைவில் மானாவாரி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள்.

    அருர் சட்டமன்றத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள், கொங்கு வேளாளர்கள், வன்னியர்கள் ஆகியோரின் வாக்குகளே வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடிய சக்தியாக விளங்கி வருகின்றனர்.

    தொகுதி பிரச்சினைகள்

    அரூர் பகுதியில் விளையும் விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்க வசதியாக குளிர்சாதன கிடங்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தபகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தொழிற்சாலை ஒன்றை ஏற்படுத்தி அதனை செயல்படுத்த வேண்டும்.

    அரூர் தொகுதி

    கம்பைநல்லூர் அருகே உள்ள சிட்கோ தொழிற்சாலை தொடங்க நிலம் வழங்கப்பட்டுள்ளன. எனவே சிப்காட் தொழிற்சாலை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.ஈச்சம்பாடி அணைக் கட்டில் இருந்து நீரேற்று பம்பு மூலம் நவலை, சின்ன கவுண்டம்பட்டி, ஆண்டிபட்டி, எலவடை, கொசப்பட்டி, மொரப்பூர் பகுதிகளுக்கு பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் விடும் திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும்.மொரப்பூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

    மொரப்பூர்- தருமபுரி ரயில் பாதை திட்டம் இதுவரை தொடங்கப் படவில்லை மாவட்ட மக்களை இணைக்கும் நோக்கில் நிறைவேற்றி தரவேண்டும். மொரப்பூர் பகுதியில் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் விவசாயம் சார்ந்த கல்லூரியை இந்த பகுதியில் தொடங்க வேண்டும்.

    அதேபோல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பல கிராமங்களுக்கு முறையாக கிடைப்பதில்லை எனவே குடிநீர் கிடைக்காத கிராமங்களை கண்டறிந்து மக்களுக்கு போதிய குடிநீர் திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மொரப்பூர் பகுதியில் அரசு கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ.போன்ற கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று இத்தொகுதி மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

    அரூர் தொகுதி
    அரூர் தொகுதி

    1967 என்.தீர்த்தகிரி (காங்கிரஸ்)
    1971 சின்னராஜ் (தி.மு.க.)
    1977 எம்.அண்ணாமலை (மார்க்சிஸ்டு கம்யூ)
    1980 சி.சபாபதி& (அ.தி.மு.க.)
    1984 ஆர்.ராஜமாணிக்கம்& (அ.தி.மு.க.)
    1989& எம்.அண்ணாமலை(இந்திய கம்யூனிஸ்டு)
    1991 அபரஞ்சி (காங்கிரஸ்).
    1996 வேடம்மாள் (தி.மு.க.)
    2001 வி.கிருஷ்ண மூர்த்தி (இந்திய கம்யூனிஸ்டு)
    2006 பி.டில்லிபாபு (மார்க்சிஸ்டு கம்யூ)
    2011 பி டில்லிபாபு (மார்க்சிஸ்டு கம்யூ) 
    2016 ஆர். முருகன் (அ.தி.மு.க.)
    2019 (இடைத்தேர்தல்) சம்பத்குமார் )அ.தி.மு.க.)

    2019 இடைத்தேர்தல்

    வே.சம்பத்குமார் (அ.தி.மு.க.)- 88,456 
    சி.கிருஷ்ணகுமார் (தி.மு.க.)- 67987
    ஆர்.முருகன்& (அ.ம.மு.க)- 14000
    Next Story
    ×