என் மலர்

  செய்திகள்

  கெங்கவல்லி தொகுதி
  X
  கெங்கவல்லி தொகுதி

  கெங்கவல்லி தொகுதி கண்ணோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டத்தில் தனி தொகுதியாக கெங்கவல்லி தொகுதி உள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தலைவாசல் தொகுதியாக இருந்ததை கெங்கவல்லி தனி தொகுதியாக உருவாக்கப்பட்டது.
  அதிமுக வேட்பாளர் நல்லதம்பியின் சொத்து மதிப்பு-

  1. கையிருப்பு- ரூ. 4,00,000
  2. அசையும் சொத்து- ரூ. 9,82,412
  3. அசையா சொத்து- ரூ. 16,50,000

  திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி சொத்து மதிப்பு-

  1. கையிருப்பு- ரூ. 20,000
  2. அசையும் சொத்து- ரூ.39,75,707
  3. அசையா சொத்து- ரூ. 3,00,000

  இத்தொகுதி ஆத்தூர் தாலுக்கா (பகுதி) நடுவலூர், தெடாஊர், ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

  இந்த தொகுதியில் ஆண்கள் 1,14,127 பேர், பெண்கள்- 1,20,095 பேர், இதரர்- 2 பேர் என மொத்தம் 2,34,224 வாக்க்காளர்கள் உள்ளனர்.

  இந்த தொகுதிக்கு உட்பட்ட தலைவாசலில், தமிழகத்திலேயே 2-வது மிகப்பெரிய தினசரி காய்கறி சந்தை உள்ளது. கோழிப்பண்ணைகள், சேகோ உற்பத்தி ஆலைகள் பரவலாக உள்ளன. தமிழக அரசு சார்பில், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ளது.

  ஆதி திராவிடர், வன்னியர், கொங்கு வேளாளர், நாயக்கர், முதலியார் என பல சமுதாயத்தினரை பரவலாகக் கொண்ட தொகுதி. கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2006-ம் ஆண்டு வரை தலைவாசல் தொகுதியாக இருந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 
  கெங்கவல்லி தொகுதியாக மாற்றப்பட்டு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றது. பின்னர் நடந்த 2016 தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மருதமுத்து வெற்றிபெற்றார்.

  இத்தொகுதியின் முக்கியத் தொழில் விவசாயம். கரும்பு, நெல், மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி, பாக்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன.நூல் மில்கள், ஜவ்வரிசி (சேகோ) ஆலைகள் மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகின்றன. கொல்லிமலையில் உற்பத்தியாகி வரும் சுவேத நதி சேலத்தின் கூவமாக மாற்றப்பட்டிருப்பது பகுதிவாசிகளின் நீண்ட கால கவலை.

  இதனை சரி செய்து சுவேத நதியை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும். தொகுதியிலுள்ள பல அரசு பள்ளிகளின் கட்டிடங்களும் வலுவிழந்து காணப்படுகின்றன. அவற்றை சரி செய்ய வேண்டும், சட்ட விரோத மது விற்பனை தடுக்கப்பட வேண்டும் என்பது தொகுதிவாசிகளின் வேண்டுகோள்.

  கெங்கவல்லி தொகுதி
  நல்லதம்பி, ரேகா பிரியதர்ஷினி

  விவசாயம் சார்ந்த தொகுதி என்றாலும் கூட, பாசனத்துக்கான நீர் தேவை எப்போதும் பற்றாக்குறையாகவே உள்ளது. தொகுதிக்குள் வசிஷ்ட நதி, சுவேத நதி என இரு ஆறுகளும், இவற்றைச் சார்ந்து பல ஏரிகள் இருந்தும், வானம் பார்த்த பூமியாகவே தொகுதி இருக்கிறது. ஆறுகளில் பெருகிவிட்ட ஆக்கிரமிப்பு, ஏரிகள் தூர் வாரப்படாமலும், சீமைக்கருவேல மரங்கள் படர்ந்தும் தூர்ந்து கிடக்கின்றன.

  தொகுதியில் உள்ள ஒரே ரெயில் நிலையமான தலைவாசல் ரெயில் நிலையத்தில், சென்னை ரயில் நின்று செல்வதில்லை என்பது மக்களின் குறை. தமிழகத்தின் பெரிய தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவது, விவசாயிகள், வர்த்தகர்களுக்கு பிரச்சினைகளை கொடுத்து வருகிறது.

  ஆத்தூரில் இருந்து தலைவாசலை பிரித்து, தனி வட்டமாக உருவாக்க வேண்டும் என்பது நிறைவேறாத கோரிக்கையாக உள்ளது.

  அதிமுக சார்பில் ஏ. நல்லதம்பி, திமுக சார்பில் ரேகா பிரியதர்ஷினி, ஐ.ஜே.கே. சார்பில் பெரியசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் வினோதினி, அமமுக சார்பில் ஏ. பாண்டியன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

  கடந்த இரண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

  2011- சுபா (தேமுதிக)
  2016- ஆண்டு- ஏ.மருதமுத்து- (அதிமுக).

  2016 தேர்தல்

  அ.மருதமுத்து (அதிமுக) 74,301 81 
  ரேகா பிரியதர்ஷினி (திமுக) 72,039 
  சண்முகவேல்முத்தையா (பாமக) 10,715 
  சுபா(தேமுதிக) 7,114 
  கணேசன்(கொமதேக) 3,786 
  சிவகாமி பரமசிவம்(பாஜக) 2,023 
  செந்தில்குமார்(நாம் தமிழர்) 921 
  மருதமுத்து(சுயேச்சை) 856 
  மாயக்கண்ணன்(சுயேச்சை) 846 
  சன்தியா( சுயேச்சை) 529 
  மூர்த்தி(சுயேச்சை) 313 
  கணபதி(சுயேச்சை) 215 
  இளமதி(சுயேச்சை) 208 
  குமார் 196 
  முத்துலட்சுமி எஸ்பி 153 
  Next Story
  ×