என் மலர்

  செய்திகள்

  குன்னம் தொகுதி
  X
  குன்னம் தொகுதி

  குன்னம் தொகுதி கண்ணோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ-வும், திமுக சார்பில் முன்னாள் எல்எல்ஏ-வும் மோதும் குன்னம் தொகுதி கண்ணோட்டம்.
  சொத்து மதிப்பு

  ஆர்.டி. ராமச்சந்திரன்

  1. கையிருப்பு- ரூ. 3,12,870
  2. அசையும் சொத்து- ரூ. 1,63,80,782
  3. அசையா சொத்து- ரூ. 2,15,72,025

  எஸ்.எஸ். சிவசங்கர்

  1. கையிருப்பு- ரூ. 42,500 
  2. அசையும் சொத்து- ரூ. 1,00,38,004.92
  3. அசையா சொத்து- ரூ. 4,31,45,000

  பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது குன்னம் சட்டமன்ற தொகுதி. சிறிய மாவட்டமான இந்த தொகுதி உருவாகி இதுவரை 2 சட்டமன்ற தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது. குன்னம் தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன்பு 1967-ம் ஆண்டு முதல் வரகூர் (தனி) என்ற சட்டமன்ற தொகுதி இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2011-ம் ஆண்டு குன்னம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.

  தற்போது 3-வது முறையான குன்னம் தொகுதி சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. குன்னம் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகா பகுதிகளும், அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா பகுதிகளும் உள்ளன.

  மேலும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள மேலாத்தூர், அழகிரிப் பாளைம், தொண்டாப்பாடி, கூத்தூர்,ஆதனூர் (தெற்கு) ஆதனூர் (வடக்கு), கொட் டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு) சிறுகன் பூர் (மேற்கு) வரகுபாடி, காரை (கிழக்கு) காரை மேற்கு, தெரணி, ஆயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் மேற்கு, கொளத் தூர் கிழக்கு, திம்மூர், கூட லூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், ஆத்தூர், சில்லக்குடி (வடக்கு) சில்லக்குடி (தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களும் அடங்கும்.

  இத் தொகுதியில் விவசாயமே பிரதான தொழில் ஆகும். குன்னம், ஆலத்தூர் தாலுகா பகுதிகளில்பருத்தி, மக்காச்சோளம், மஞ்சளும், செந்துறை தாலுகா பகுதிகளில் பருத்தி, முந்திரி உள்ளிட் டவை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

  சுண்ணாம்பு கல்குவாரி களும் அதிகம் செயல்பட்டு வருகிறது. செந்துறை தாலுகாவில் தனியார் சிமெண்டு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதஐயர் தனது பெற்றோருடன் தங்கி பயின்றதும் இந்த தொகுதியில்தான்.

  இத்தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு திருமாந்துறை, பென் னக் கோணம் உள்ளிட்ட கிராமங்களில் கையகப்படுத் தப்பட்ட சுமார் 3,500 ஆயிரம் ஏக்கர் நிலமும், எதிர்பாக்கப்பட்ட தொழில் வாய்ப்புகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

  மாறாக அதற்காக விவ சாயிகளிடம் எடுத்த நிலங்களை திரும்பவும் அரசு ஒப்படைக்கவில்லை. குன்னம் தாலுகா ஒதியம் பகுதியில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

  குன்னம் தாலுகாவில் பருத்தியை அடிப்படையாக கொண்டு தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஆலத்தூர் தாலுகாவில் அமைக்கப்பட்டு வரும் கொட்டரை நீர் தேக்க பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். செந்துறை தாலுகாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதே இத்தொகுதிமக்களின் கோரிக்கையாகும்.

  குன்னம் தொகுதி
  ராமச்சந்திரன், சிவசங்கர்

  மறுசீரமைப்பிற்கு பிறகு குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2 முறை தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க., தி.மு.க. தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக மோதின. இதில் அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி. ராமசந்திரன் தி.மு.க.வில் மறைந்த அரியலூர் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் துரைராஜும் போட்டியிட்டனர். இதில் ராமசந்திரன் 78,218 வாக்குகளை பெற்று துரைராஜை 18,796 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

  நடைபெற உள்ள 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.- தி.மு.க. நேரடியாக மோதுகின்றன. அதிமுக சார்பில் மீண்டும் தற்போதைய குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி. ராமசந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  கடந்த 2011-ம் ஆண்டு குன்னம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர் இந்த முறை குன்னம் தொகுதிக்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

  ஆர்.டி.ராமச்சந்திரன் (அ.தி.மு.க. வெற்றி)- 78218
  தங்க.துரைராஜ் (தி.மு.க.)- 59422
  வைத்திலிங்கம் (பா.ம.க.)- 37271
  ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தை)- 19853
  அருள் (நாம் தமிழர்)- 1665 
  ரகுபதி (ஐ.ஜே.கே.)- 1168
  ராஜேந்திரன் (பி.எஸ்.பி.)- 1092
  துரைராஜ் (சுயேட்சை)- 1055
  ராமலிங்கம் (சுயேட்சை)- 586
  சிலம்பரசன் (சுயேட்சை)- 566
  செந்தில்குமார் (சுயேட்சை) &393
  ராஜன் (சுயேட்சை) &313
  Next Story
  ×