search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் தொகுதி
    X
    பாபநாசம் தொகுதி

    அதிமுக மூன்று முறை தொடர்ந்து கைவசம் வைத்திருக்கும் பாபநாசம் தொகுதி கண்ணோட்டம்

    காங்கிரஸ் கோட்டையாக இருந்த பாபநாசம் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை அதிமுக வெற்றி வாகை சூடிய பாபநாசம் தொகுதி கண்ணோட்டம்.
    சொத்து மதிப்பு

    கே. கோபிநாதன்

    1. கையிருப்பு- ரூ. 30 ஆயிரம்
    2. அசையும் சொத்து- ரூ. 5,40,500
    3. அசையா சொத்து- ரூ. 20,00,000

    ஜவாஹிருல்லா

    1. கையிருப்பு- ரூ. 75 ஆயிரம்
    2. அசையும் சொத்து- ரூ. 26,54,735.74
    3. அசையா சொத்து- ரூ. 54,78,110

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு திருவோணம், வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. ஆனால் புதிதாக வேறு எந்த தொகுதிகளும் சேர்க்கப்படவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த பாபநாசம் தொகுதியில்தான் 1989 தேர்தலில் போட்டியிட்டு  ஜி.கே. மூப்பனார் வெற்றி பெற்றார்.

    பாபநாசம் தொகுதி

    இந்த தொகுதியில் நடைபெற்ற 15 சட்டமன்ற தேர்தல்களில் ஒருமுறை தி.மு.க.வும், அ.தி.மு.க. 3 தடவையும், 8 முறை காங்கிரஸும், 2 முறை த.மா.கா.வும், வெற்றி பெற்றுள்ளன. ஒரு முறை சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த தொகுதியில் 1971-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணபதி சட்டமன்ற தமிழக சட்டமன்ற துணை சபாநாயகராக இருந்துள்ளார். இதே தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மூன்று முறை போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கண்ணு தமிழக வேளாண்மை துறை அமைச்சராக இருந்து, தனது பதவி காலத்திலேயே இறந்து விட்டார். அதன் பிறகு இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

    பாபநாசம் தொகுதி

    தற்போது தொகுதி சீரமைப்புக்கு பின் இந்த தொகுதி 172-வது வரிசையில் உள்ளது. இந்த தொகுதியில் பாபநாசம் ஒன்றியத்தை சேர்ந்த 34 ஊராட்சிகள், பாபநாசம்,அய்யம்பேட்டை பேருராட்சிகள், அம்மாபேட்டை ஒன்றியத்தை சேர்ந்த 46 ஊராட்சிகளும், அம்மாபேட்டை, மெலட்டூர் பேரூராட்சிகளும், கும்பகோணம் ஒன்றியத்தை சேர்ந்த 10 ஊர்களும், சுவாமிமலை பேரூராட்சியும் அடங்கி உள்ளது.

    பாபநாசம் தொகுதி

    விவசாயம் சார்ந்த இந்த தொகுதியில் நெல், கரும்பு, வாழை, பூக்கள், காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இந்த தொகுதியில் அரசு வேளாண்மை கல்லூரி, கலைக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும், நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை பாபநாசம் ரெயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தஞ்சை- விக்கிரவாண்டி சாலை பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

    பாபநாசம் தொகுதி

    ராமநல்லூர் - குடிக்காடு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் புதிய பால பணிகளை உடனே துவக்க வேண்டும், இந்த தொகுதிக்குள் காவிரி, குடமுருட்டி ஆறுகளில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பாலப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும், வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அரசு போக்குவரத்து பணிமனையை துவக்க வேண்டும், பாபநாசம் துணை மின் நிலைய விரிவாக்க பணிகளை விரைவுபடுத்த வேண்டும், 

    பாபநாசம் பகுதியில் இடிக்கப்பட்ட அரசு மருத்துவமனை புறநோயாளிகள் கட்டிடம், மருத்துவர்கள் குடியிருப்பு, பாபநாசம் வட்டார கல்வி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் கட்டிடம், நெடுஞ்சாலை துறை அலுவலக கட்டிடம், ஊரக வளர்ச்சி துறை குடியிருப்பு கட்டிடம், கணினி வசதியுடன் கூடிய பத்திரிகையாளர் கட்டிடம் ஆகியவற்றை கட்டித்தர வேண்டும். 

    தஞ்சாவூர்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி உயர படுத்தி, சாலையை விரிவுபடுத்த வேண்டும்.

    பாபநாசம் தொகுதி

    பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 49 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 275 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 339 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள், படையாச்சி, மூப்பனார் உடையார், கள்ளர், கிறிஸ்தவர்கள் என அனைத்து ஜாதியினரும் உள்ளனர்.

    இந்த தொகுதியில் அனைத்து ஜாதியினர் இருந்தாலும் இந்த தொகுதியில் வெற்றி தோல்வியை ஜாதி ஓட்டுகள் நிர்ணயிப்பது கிடையாது. வேட்பாளர்களின் தேர்வை பொறுத்தே வெற்றி நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    பாபநாசம் தொகுதி
    பாபநாசம் தொகுதி

    1952 சுயம் பிரகாசம் (சுயேட்சை)
    1957 வெங்கடாசல நாட்டார் (காங்கிரஸ்)
    1962 திட்டை சுப்பிரமணியன் (காங்கிரஸ்)
    1967 சௌந்தர்ராஜன் மூப்பனார் (காங்கிரஸ்)
    1971 கணபதி (தி.மு.க.)
    1977 சௌந்தர்ராஜன் (காங்கிரஸ்) 
    1980 ராஜாராமன் (காங்கிரஸ்)
    1984 ராஜாராமன் (காங்கிரஸ்)
    1989 ஜி.கே.மூப்பனார் (காங்கிரஸ்)
    1991 ராஜாராமன் (காங்கிரஸ்)
    1996 கருப்பண்ண உடையார் (த.மா.கா)
    2001 ராம்குமார் (த.மா.கா)
    2006 துரைக்கண்ணு (அ.தி.மு.க.)
    2011 துரைக்கண்ணு (அ.தி.மு.க.)
    2016 துரைக்கண்ணு (அ.தி.மு.க.)
    Next Story
    ×