search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசர் போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி
    X

    ரேசர் போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி

    ரேசர் நிறுவனம் தனது ரேசர் போன் 2 அதிகாரப்பூர்வ அறிமுக தேதியை அறிவித்துள்ளது. முதல் தலைமுறை ரேசர் போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. #RazerPhone2
    ரேசர் போன் 2 வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் முதல் தலைமுறை ரேசர் போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ரேசர் போன் 2 அக்டோபர் 10-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதற்கான அழைப்பினை ரேசர் வெளியிட்டுள்ளது. முன்னதாக ரேசர் போன் 2 விவரங்கள் சீனாவின் AnTuTu வலைத்தளத்தில் லீக் ஆகியிருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியானது.



    சீனாவின்பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் லீக் ஆன விவரங்களில் ரேசர்போன் 2 மாடலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. முந்தைய ரேசர் ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இத்துடன் 5.7 இன்ச் QHD ஷார்ப் IGZO ஸ்கிரீன், குவால்காம் க்யூ-சின்க் வசதி வழங்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரேசர்போன் 2 அன்டுடு தளத்தில் 2,83,397 புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, கேமரா மற்றும் பேட்டரி சார்ந்த தகவல்கள் அறியப்படவில்லை.

    இந்த ஸ்மார்ட்போன் மற்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ரோக் போன், சியோமி பிளாக் ஷார்க் மற்றும் இதர மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #RazerPhone2
    Next Story
    ×