search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இதுவரை இல்லாத சலுகைகளுடன் விரைவில் பிளிப்கார்ட் விற்பனை திருவிழா

    பிளிப்கார்ட் தளத்தில் இதுவரை இல்லாத அளவு அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கும் விற்பனை திருவிழா மே மாதத்தின் நான்கு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
    புதுடெல்லி:

    பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நான்கு நாட்களுக்கு சிறப்பு விற்பனை திருவிழா நடைபெற இருக்கிறது. மே 13-ம் தேதி துவங்க இருக்கும் சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் என அழைக்கப்படுகிறது. 

    இந்தியாவில் மே 13-ம் தேதி துவங்கி மே 16-ம் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது. பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், தொலைகாட்சிகள் மற்றும் இதர மின்சாதனங்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன.

    இம்முறை நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் அனைத்து பொருட்களும் இதுவரை இல்லாத அளவு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட சாதனங்கள் ஃபிளாஷ் முறையி்லும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நான்கு நாட்கள் சிறப்பு விற்பனை ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்கள் பிரிவில் மட்டும் அதிகபட்சம் ஆறுமடங்கு வளர்ச்சி் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    கோப்பு படம்

    இத்துடன் சேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, டெபிட் கார்டு இஎம்ஐ, பைபேக் கியாரண்டி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்ட சாதனங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன. 

    சிறப்பு விற்பனை மட்டுமின்றி போட்டி முறையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை வெறும் ரூ.1 என்ற விலையில் வாங்கிட முடியும். இதே போன்று சிறப்பு விற்பனையில் 100% கேஷ்பேக் சலுகையையும் போட்டியில் பரிசாக வென்றிட முடியும். சிறப்பு விற்பனை நாட்களில் வழக்கத்தை போன்றே இந்த ஆண்டும் சில ஸ்மார்ட்போன் அறிவிப்புகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லேப்டாப்கள், கேமரா, பவர் பேங்க், டேப்லட் மற்றும் இதர மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 80% வரை தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தொலைகாட்சி மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு அதிகபட்சம் 70% வரை தள்ளுபடி வழங்கப்படலாம் என்றும் முக்கிய தொலைகாட்சி மாடல்கள் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×