என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  18 கோடி வாடிக்கையாளர்கள் ரூ.7,128 கோடி வருவாய் - அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் 31, 2018 வரையிலான காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ வருவாய் விவரம் அந்நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  மும்பை:

  இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் 31, 2018 வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. இதில் ரூ.7,128 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. 

  இது முந்தைய காலாண்டை விட 3.6% வளர்ச்சியுடன் ரூ.510.44 கோடி லாபம் பெற்றிருக்கிறது. மூன்றாவது காலாண்டில் மட்டும் 1.2% வளர்ச்சியை ஜியோ பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் ஜியோவின் போட்டி நிறுவனமான ஏர்டெல் ரூ.652.30 கோடி நஷ்டமடைந்துள்ளது.

  ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 18.66 கோடியை கடந்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் 2.65 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ சேர்த்துள்ளது. முந்தைய காலாண்டில் சுமார் 2.15 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்திருந்தனர்.  - குறிப்பிட்ட வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாய் மாதம் 137.1 ஆகும். முந்தைய காலாண்டில் மாதம் 154 ஆக இருந்தது. 

  - வயர்லெஸ் டேட்டா பயன்பாடு 506 கோடி ஜிபி ஆக இருக்கிறது. (மாதம் ஒரு வாடிக்கையாளர் 9.6 ஜிபி)

  - சராசரி வாய்ஸ் கால் பயன்பாடு நாள் ஒன்றிற்கு 37,218 கோடி நிமிடங்களாக இருக்கிறது. (ஒரு வாடிக்கையாளர் மாதம் 716 நிமிடங்கள்)

  - ஒரு வாடிக்கையாளரின் மாதாந்திர வீடியோ பயன்பாடு 240 கோடி மணி நேரம். (மாதம் 13.8 மணி நேரம்)

  இதே காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோமியூசிக் மற்றும் சாவன் மியூசிக் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இருநிறுவனங்கள் இணைந்து மியூசிக், மீடியா மற்றும் கலைஞர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய சேவையாக உருவெடுக்க முடிவு செய்தன. 

  ஜியோமியூசிக் மற்றும் சாவன் நிறுவனங்களின் ஒப்பந்த மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிக மதிப்பு கொண்டது என கூறப்பட்டிருந்தது. இதில் ஜியோமியூசிக் மதிப்பு மட்டும் 67 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும்.
  Next Story
  ×