என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  தினமும் 1.4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அறிவித்துள்ள புதிய சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
  புதுடெல்லி:

  ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.219 புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

  ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ரூ.199 சலுகையை போன்றே புதிய சலுகையும் அமைந்துள்ளது. இரண்டு சலுகைகளிலும் சமஅளவு டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வழங்கப்படும் நிலையில், புதிய சலுகையில் அன்லிமிடெட் ஹெல்லோ டியூன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை தங்களது மொபைல் நம்பருக்கு காலர் டியூன்களை வைத்துக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

  ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு காலர் டியூன்களை இலவசமாக வழங்கி வருகிறது. ஏர்டெல் ரூ.219 சலுகையை பெற வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் செயலி அல்லது ஏர்டெல் வலைத்தளம் செல்ல வேண்டும். காலர் டியூன்கள் வேண்டாம் என்போர் ரூ.199 சலுகையை தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும்.   ஏர்டெல் ரூ.199 சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 39.4 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஏர்டெல் ரூ.219 சலுகையை போன்று ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.149 மற்றும் ரூ.198 விலையில் இரண்டு சலுகைகளை வழங்குகிறது. 

  இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு முறையே தினமும் 1.5 ஜிபி மற்றும் ரூ.2 ஜிபி டேட்டா சுமார் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவற்றை ஜியோ வழங்குகிறது.

  சமீபத்தில் ஏர்டெல் ரூ.49 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் ரூ.49 விலையில் அறிவித்த சலுகையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  ஏற்கனவே ஏர்டெல் வழங்கி வந்த ரூ.349 சலுகையை மாற்றியமைத்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கியது. முன்னதாக ரூ.349 சலுகையில் வழங்கப்பட்ட 2 ஜிபி டேட்டா அளவு 3ஜிபியாக அதிகரிக்கப்பட்டது. ரூ.249 ஏர்டெல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
  Next Story
  ×