என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 3 இந்தியாவில் அறிமுகம்
    X

    மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 3 இந்தியாவில் அறிமுகம்

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்ஃபி 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் ஏற்கனவே வெளியிட்ட செல்ஃபி 2 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
    புதுடெல்லி: 

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்ஃபி 2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான செல்ஃபி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் அறிமுகமாகியுள்ள புகிய ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெயருக்கு ஏற்றார்போல் புதிய செல்ஃபி 3 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய செல்ஃபி 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்தியாவி்ல் நுபியா என்2 மற்றும் விவோ 66 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.



    மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 3 சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 720x1280 பிக்சல் ரெசல்யூஷன்
    - ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - 3000 எம்ஏஎச் பேட்டரி
    - 4ஜி வோல்ட்இ, 3ஜி
    - வைபை, ப்ளூடூத்

    சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டது. பாரத் 3 மற்றும் பாரத் 4 என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்கள் முறேயே ரூ.4,499 மற்றும் ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 1 ஜிபி ரேம் மற்ரும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் 5 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி ஓடிஜி மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் 22 இந்திய மொழிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பாரத் 3 ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் டிஸ்ப்ளே 480x854 பிக்சல் ரெசல்யூஷன், பாரத் 4 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் 2000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    Next Story
    ×