search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்களுக்கு ஆபத்து
    X

    இந்தியாவில் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்களுக்கு ஆபத்து

    இந்தியாவில் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆதார் வைத்திருப்போர்களில் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவல்களில் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் மூலம் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குறைந்தளவு பாதுகாப்பு நடைமுறைகளே இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த சில மாதங்களில் ஆதார் தகவல்கள் வெளியாவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இண்டர்நெட் மற்றும் சமூக மையத்தின்படி, அரசு மையம் மூலம் இயக்கக்கூடிய நான்கு அரசாங்க டேட்டாபேஸ்களை ஆய்வு செய்த போது, இவற்றின் மூலம் சுமார் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் மற்றும் 10 கோடி பேரின் வங்கி கணக்கு சார்ந்த தகவல்கள் முறையற்ற பாதுகாப்பு வழிமுறைகளால் வெளியாகியிருக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது. 





    மற்ற அரசு மையங்கள் மற்றும் நம்பத்தகுந்த நிறுவனங்களால் வெளிப்படையாக இயக்க வழி செய்யும் படி இதுபோன்ற டேஷ்போர்டுகள் உருவாக்கப்பட்ட நிலையில், இவற்றை பாதுகாக்க பின்பற்றப்படும் வழிமுறைகள் காலம் கடந்துவிட்டதால் ஆதார் தகவல்களை மிக எளிதாக இயக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. 

    இத்துடன் NSAP தளத்தில் அதிகப்படியான தகவல்களை டவுன்லோடு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனாளர்களின் எண், பெயர், அப்பா / கணவன் பெயர், வயது, பாலினம், வங்கி அல்லது தபால் அலுவலக அக்கவுண்ட் எண் உள்ளிட்ட தகவல்கள் மாவட்டம் மற்றும் மாநலம் வாரியாக டவுன்லோடு செய்ய வழி செய்கிறது. 

    பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் லாக்-இன் வசதி வைத்துள்ள யார் வேண்டுமானாலும் பெற முடியும். 
    Next Story
    ×