என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்- சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு இலங்கை கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு இலங்கை மற்றும் அதையொட்டிய மன்னார் பகுதிகளில் நிலவி வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story






