என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திரிஷா கிட்ட இருந்தும், வீட்டில் இருந்தும் விஜய் முதலில் வெளியே வரணும்: நயினார் நகேந்திரன் கடும் விமர்சனம்
- குடும்பத்துடன் நல்ல உறவு வைக்கணும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்லணும்.
- கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை ஏறி வைகுண்டம் போக முடியுமா?
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விஜய் பேசுகையில் "நாம் வெறுப்பு அரசியல் செய்ய வரவில்லை. அடுத்த வர்களின் முகவரியில் அர சியல்வாதிகளாக இருந்து கொண்டிருக்கிற இவர்கள் எல்லோருக்கும் ஒரு சவால்.
என்னை மாதிரி தனியாக சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்கி காட்டுகிற "தில்" இருக்கிறதா? "திராணி" இருக்கிறதா?" என்றார்.
அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-
பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும். குடும்பத்துடன் நல்ல உறவு வைக்கணும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்லணும்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை ஏறி வைகுண்டம் போக முடியுமா? (த.வெ.க.-வுக்கும் திமுக-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி என விஜய் சொன்னதற்கு பதில் அளித்தபோது). ஒருக்காலம் முடியாது. ஒரு கவுன்சிலர் கூட இல்லை. 30 சதவீதம் வாக்கு 2 வருடத்தில் வந்திருச்சி எனச் சொல்கிறார். அனுபவத்தில் பார்க்க வேண்டும். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். 32 சதவீதம் வாக்கு இருக்கு என்பதை நடிகர் என்பதனால் சொல்ல முடியுமா?.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார்.






