என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு
- நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், ஐபிஎஸ் ஆக இருக்க தகுதியில்லை.
- வருண்குமார் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண்குமார் ஐ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் "நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், ஐபிஎஸ் ஆக இருக்க தகுதியில்லை. தனக்கெதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறை சென்றவர் வருண்குமார்.
விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனார். வருண்குமார் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது" என சீமான் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






