என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அனுமதி இல்லாத கல்குவாரிகளை மூட வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- தமிழகத்தில் சட்டப்பூர்வமல்லாத கல்குவாரிகளில் கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதும் சட்டத்திற்குப் புறம்பானது.
- 13 மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு, சமீபத்தில் வெளியிட்ட புதிய 13 மணல் குவாரிகளில் மணல் எடுக்க அனுமதித்தால் நதிநீர் போக்கில் மாற்றம் ஏற்பட்டு நிலத்தடி நீர் முற்றிலும் வரண்டு போக வாய்ப்புண்டு என தெரிவிக்கின்றனர். எனவே இந்த 13 மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழகத்தில் சட்டப்பூர்வமல்லாத கல்குவாரிகளில் கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதும் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே முறையான அனுமதி உள்ள கல்குவாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு சரியாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட வேண்டும். முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் கல்குவாரிகளை உடனடி யாக முட வேண்டும்.
எனவே தமிழக அரசு அத்தியாவசியத் தேவையான மணல் விவகாரத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும், பொது மக்களுக்கு தரமான மணல் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டப்பூர்வமாக, முறையாக மணல் குவாரிகளை இயக்க வேண்டும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






