என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி: தாராபுரம்-காங்கேயம் தொகுதி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
- அரசு திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி வருகிற தேர்தலில் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சென்னை:
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற நிகழ்ச்சியின் மூலம் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வரும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் தினமும் 2 அல்லது 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகள் பங்கேற்று வந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
அந்த வகையில் இன்று தாராபுரம், காங்கேயம் தொகுதி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து ஆலோசித்தார். அரசு திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி வருகிற தேர்தலில் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கடந்த 46 நாட்களில் மட்டும் 105 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.






