என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தவெக பதாகைகள் அகற்றம்: நாங்கள் விதை... புதைக்க நினைத்தால் முளைப்போம் - TVK அருண்ராஜ் பதிவு
- இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை!
- எத்தனை தடைகள் போட்டாலும், மக்களின் ஆதரவோடு அதை உடைத்தெறிவோம்!
தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"அதிகாரத் திமிரா? தோல்வி பயமா?
திருச்செங்கோட்டில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, முறைப்படி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு பதாகைகளை (Banners), எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகார பலத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.
தகவல் அறிந்து நேரில் சென்று தடுத்து நிறுத்தினேன். "எந்த விதியின் அடிப்படையில் அகற்றுகிறீர்கள்?" என்று காவல்துறையிடம் கேட்டால் பதிலே இல்லை! காரணமே இல்லாமல் எங்கள் பதாகைகளை அகற்றுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோகம்!
இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை!
எத்தனை தடைகள் போட்டாலும், மக்களின் ஆதரவோடு அதை உடைத்தெறிவோம்!
நாங்கள் விதை... புதைக்க நினைத்தால் முளைப்போம்
என்று தெரிவித்துள்ளார்.
Next Story






