2026 சட்டமன்ற தேர்தல்: பிப். 6ஆம் தேதி முதல் தவெக விருப்ப மனு

விருப்ப மனு பெறும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.விருப்ப மனு வினியோகிக்கப்படும் என த.வெ.க. கட்சி அறிவித்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்: பிப். 6ஆம் தேதி முதல் தவெக விருப்ப மனு
Published on

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் முதல் முறையாக களமிறங்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வினியோகிக்கப்படும் என த.வெ.க. கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி வருகிற 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை விருப்ப மனு வினியோகம் செய்யப்பட உள்ளது. கட்சியினர் விருப்ப மனுக்களை தலைமை நிலைய செயலகத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com