என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு - தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள்
- காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருந்தது.
- தேர்வெழுத முடியாத ஆத்திரத்தில் 15-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் நடந்தது.
காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருந்தது. இந்த தேர்வுகள் 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தேர்வெழுத முடியாத ஆத்திரத்தில் 15-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.






