TN Governor | தமிழக பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவியேற்றார்

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
TN Governor | தமிழக பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவியேற்றார்
Published on

மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பொறுப்பு ஆளுநராக அர்லேகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com