என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி
    X

    மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி

    • "வணக்கம் வள்ளுவ" நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
    • ஈரோடு தமிழன்பன் வயது மூப்பு காரணமாக காலமானார்.

    ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் சிறந்தவர். இவரின் கவிதைத் தொகுப்பான "வணக்கம் வள்ளுவ" நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

    மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் போன்ற பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார். இவர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92.

    அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    இந்நிலையில், மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    Next Story
    ×