என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்த பாகுபலி யானை
    X

    ஊட்டி மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்த பாகுபலி யானை

    • கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது.
    • பாகுபலி யானை சாலையை கடந்து நெல்லிமலை வனபகுதிக்குள் சென்றது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம், ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது.

    இந்த யானை பகலில் வனப்பகுதிக்குள்ளும், இரவு நேரத்தில் வனப்பகுதியை ஓட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சாலையை கடக்க முயன்றனர்.

    எப்போதும் பரபரப்பாக இயங்கும் அந்த சாலையில், அந்த நேரத்தில் அதிகளவிலான வாகனங்கள் வந்தது.

    சாலையை கடக்க முயன்ற யானை அந்த வாகனங்களை வழிமறித்தது. தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களை நோக்கி பாகுபலி யானை வந்தது.

    இதனால் மிரண்டு போன வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு அமைதியாக நின்றனர்.

    பரபரப்பாக இயக்கும் ஊட்டி சாலையில் திடீரென பாகுபலி யானை உலா வந்ததால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    மேலும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

    ஆனால் வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே பாகுபலி யானை சாலையை கடந்து நெல்லிமலை வனபகுதிக்குள் சென்றது.

    வாகன போக்குவரத்து அதிகமுள்ள ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் பாகுபலி யானை நடமாடியது வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை இயக்கி செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×