என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாா்ச் 6-ந்தேதி முதல் செட் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு
    X

    மாா்ச் 6-ந்தேதி முதல் 'செட்' தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு

    • தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு, தோ்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
    • தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு, தோ்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

    பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி வாய்ந்த நபா்களைத் தோ்வு செய்ய யுஜிசி நெட் தோ்வு நடத்துகிறது. அதே போல் மாநிலங்களால் செட் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் செட் தோ்வை சுழற்சி முறையில் மாநில பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகின்றன.

    அந்த வகையில் 2024 முதல் 3 ஆண்டுகளுக்கு செட் தோ்வை நடத்த திருநெல்வேலி மனோன்மணீயம் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தோ்வுக்கு முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியா் தோ்வு வாரியம் செட் தோ்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2024-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான தகுதித்தோ்வுக்கு (செட்) திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன.

    இந்நிலையில், செட் தகுதித்தோ்வு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று உயா்கல்வித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி, யுஜிசி வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி செட் தகுதித்தோ்வு மாா்ச் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கணினி வழியில் நடைபெறும்.

    இத்தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு, தோ்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதனை தோ்வா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதிச் சீட்டு விண்ணப்பதாரா்களுக்கு தனியாக அனுப்பப்படாது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×