என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மட்டற்ற மகிழ்ச்சி... எழும்பூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டபின் கஸ்தூரி பேட்டி
- கஸ்தூரி இன்று காலை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார்.
- கடந்த 4 நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் மிகவும் மிஸ் செய்தேன்.
சென்னை:
தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி எழும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான கஸ்தூரி தினமும் காலை 10.30 மணிக்கு எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கஸ்தூரி இன்று காலை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார். பின்னர் பேட்டியளித்த அவர், "கடந்த 4 நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் மிகவும் மிஸ் செய்தேன். தற்போது அனைவரையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி" என தெரிவித்தார்.
Next Story






