என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தைலாபுரத்தில் திடீர் திருப்பம்.. அன்புமணி ராமதாஸ் வருகை - தந்தையுடன் சந்திப்பா?
    X

    தைலாபுரத்தில் திடீர் திருப்பம்.. அன்புமணி ராமதாஸ் வருகை - தந்தையுடன் சந்திப்பா?

    • அன்புமணி தனியாக ஆகஸ்ட் 17 அன்று பொதுக்குழு கூட்டம் நடத்த உள்ளார்.
    • இன்று அவரின் தைலாபுரம் வருகை கவனம் பெற்றுள்ளது.

    தந்தை - மகன் அதிகார மொதலில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சிக்கியுள்ளது. மகன் அன்புமணியை, ராமதாஸ் பொது வெளிகளில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    பனையூரில் தனி அலுவலகம் அமைத்து அன்புமணி செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் ராமதாஸின் மனைவியும் தனது தாயாருமான சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, அவரை சந்திப்பதற்காக தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அன்புமணி தனியாக ஆகஸ்ட் 17 அன்று பொதுக்குழு கூட்டம் நடத்த உள்ள நிலையில் இன்று அவரின் தைலாபுரம் வருகை கவனம் பெற்றுள்ளது.

    இதற்கு முன்னர் 2 முறை தைலாபுரம் வந்தும் ராமதாஸை அன்புமணி பார்க்காமல் சென்ற நிலையில் இந்த முறை சந்திப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Next Story
    ×