என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோடை விடுமுறை வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் இரவு 9 மணி வரை நடந்தது
    X

    கோடை விடுமுறை வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் இரவு 9 மணி வரை நடந்தது

    • ஜாமின் உள்ளிட்ட குற்ற வழக்குகளை நீதிபதி விக்டோரியா கவுரி விசாரித்தார்.
    • இரவு 9 மணி வரை வழக்குகளை விசாரித்த நீதிபதிகளுக்கு வக்கீல்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க வாரத்துக்கு 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் முதல் வாரம் நீதிபதிகள் என்.மாலா, எல்.விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், ஜாமின் உள்ளிட்ட குற்ற வழக்குகளை நீதிபதி விக்டோரியா கவுரி விசாரித்தார். இவர் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை 700 வழக்குகளை விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்தார்.

    அதேபோல, நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள்முருகன் ஆகியோர் காலை 10.30 மணி முதல் டிவிசன் பெஞ்ச் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். இந்த வழக்குகள் எல்லாம் மாலை 5 மணிக்கு விசாரித்து முடித்தனர்.

    பின்னர், தனித்தனியாக விசாரிக்க வேண்டிய வழக்குகளை சுமார் 5.30 மணிக்கு விசாரிக்க தொடங்கி, இரவு 9 மணிக்கு விசாரித்து முடித்தனர். இதனால் கோடைக்கால வழக்கு விசாரணை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்தது.

    இதற்கு வக்கீல்களும் ஒத்துழைப்பு வழங்கினர். இரவு 9 மணி வரை வழக்குகளை விசாரித்த நீதிபதிகளுக்கு வக்கீல்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×