என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோடை சீசனையொட்டி மதுரை-கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    கொடைக்கானலுக்கு இயக்கப்படும் புதிய குளிர்சாதன அரசு பஸ்

    கோடை சீசனையொட்டி மதுரை-கொடைக்கானலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அரிய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
    • சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை சீசனின் போது லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அரிய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.

    மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்படி தற்போது அனைத்து வாகனங்களிலும் இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலிருந்து உள்ளூர் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போது பயணிகளின் வருகையை குறித்து கொடைக்கானலில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர புதிதாக ஏ.சி. பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 20ம் தேதிக்கு பின்னர் கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை காண்பதற்காக அரசு சிறப்பு சைட்சீயிங் பஸ் இயக்கப்பட உள்ளது. குறைவான கட்டணத்தில் அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியும். பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். மேலும் அவர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அலுவலர்கள் வழிகாட்டுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×