என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பறிபோகும் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. விரைவில் அமைச்சரவையில் மாற்றம்?
- ஓரிரு நாளில் மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
- செந்தில் பாலாஜி முடிவெடுக்க வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) வரை கெடு விதித்திருந்தது.
2011 முதல் 2015-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக தொடர்பாக பணமோசடி வழக்கு தொடரபட்டது. இதையடுத்து அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டு அவர் மோசடி செய்ததற்காக முகாந்திரம் இருப்பதாக கூறி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் திமுக அமைச்சர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து வாதம் செய்தது. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்பே அவருக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது.
சுமார் ஒன்றை வருடம் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நீண்ட போராட்டத்தின்பின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது. இதையடுத்து அவர் ஓரிரு நாளில் மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி போக்குவரத்துத் துறையில் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி இருப்பதால் சாட்சிகள் கலைக்கப்படலாம் என்று வாதங்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் அமைச்சர் பதவியை? ஜாமீனா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி முடிவெடுக்க வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) வரை கெடு விதித்திருந்தது. இதைத்தொடர்ந்து சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனைக்கு பின் செந்தில் பாலாஜி பதவி விலகுவதே நல்லது என முடிவெடுத்துள்ளாராம்.
இன்று ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்து பேசியப்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் திங்கள்கிழமை செந்தில் பாலாஜி ராஜினாமா முடிவு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தகவல்கள் மூலம் ஊர்ஜிதமாகியள்ளது.






