என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காவலாளி அஜித் குமார் லாக்-அப் மரணம்: நீதி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
- மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் விசாரிப்பார்.
- நீதிபதி விசாரிப்பார் என்றால, அது நீதி விசாரணை என்றே அழைக்கப்படும்.
திருப்புவனம் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையின்போது, போலீசார் அடித்துக்கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லாக்-அப் டெத் தொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருபுவனம் மாவட்ட டி.எஸ்.பி.யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அஜித் குமார் லாக்-அப் மரணம் தொடர்பாக வழக்கு விசாரணை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் விசாரிப்பார். நீதிபதி விசாரிப்பார் என்றால், அது நீதி விசாரணை என்றே அழைக்கப்படும். ஆவணங்களை நீதிபதியிடம் ஒப்படைக்க நீதிபகள் உத்தரவிட்டுள்ளனர்.
Next Story






